பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் தீர்மானம் மிக்க முக்கிய கூட்டம் இன்று (02) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்றுள்ள கட்சி உறுப்பினர்களும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்துக்காக நாடு திரும்பியுள்ளதாகவும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment