ஐ.நா மனித உரிமை கமிசனுக்கு மண்டைக்குள் ஒன்றுமேயில்லை! பிலிப்பீஸ்ன் அதிபர் விளாசல்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அந்நாட்டு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கும், தேடி கண்டுபிடித்து சுட்டுக் கொல்லவும் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே காவல்துறை மற்றும் படையினருக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சுமார் ஏழரை லட்சம் பேர் சரண் அடைந்துள்ளனர். 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் போலீசாரின் தேடுதல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டில் மின்டானாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த டட்டு சவுதி அம்பட்டுவான் நகர மேயர் சம்சுதீன் டிமாவ்கோம் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேரை போதைப்பொருள் தடுப்பு போலீசார் சுட்டுக் கொன்றனர். இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் இப்படி கொல்லப்பட்டதாக தெரிகிறது.
பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்த அராஜகப் போக்குக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனக்குரலை எழுப்பியுள்ளனர். இந்த அத்துமீறல் தொடர்பாக விரிவான விசாரணைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை என்று பலரை கொன்று குவித்துவரும் அதிபர்
ரோட்ரிகோ டுட்டட்ரே இதற்கெல்லாம் பதில் சொல்லியே தீரவேண்டிய காலம் விரைவில் வரும் என்று ஐக்கிய நாடுகள் சபை உயர் கமிஷனர் ஸெய்ட் ராட் அல் ஹுசேன் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பிடிபடும் பெண்களை மர்ம உறுப்பில் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ள ரோட்ரிகோ டுட்டட்ரே-வை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரோட்ரிகோ டுட்டட்ரே ஐ.நா. மனித உரிமை உயர் கமிஷனர்மீது தற்போது வசைமாரி பொழிந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டுட்டர்ட்டே, ‘அடேய் மனித உரிமை கமிஷனர் பதிவியில் இருக்கும் விபசாரியின் மகனே, நானா மனநல மருத்துவரிடம் போக வேண்டும்?
நீங்கள் நன்றாகதான் இருக்கிறீர்கள். ஆனால், ஜோர்டான் இளவரசரான மனித உரிமை கமிஷனரின் பேச்சுக்கு பதில் கூறாதிருங்கள், ஆனால், அவர் உங்களை பழிதீர்க்க வேண்டும் என்கிறார் என்று என் மனநல மருத்துவர் கூறியுள்ளார்.
ஆனால் பார்.., உனக்கு இவ்வளவு பெரிய தலை இருக்கிறது, ஆனால் அதன் உள்ளே ஒன்றுமில்லாமல் காலியாக இருக்கிறது. உனது இரு காதுகளுக்கும் இடையில் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாமல் மண்டை வெற்றிடமாக உள்ளது. அதன் உள்ளே இருக்கும் பொருளால் தலைமுடி வளர தேவையான சக்தியைகூட கொடுக்க முடியாததால் உன் தலைமுடி எல்லாம் கொட்டிப்போய் கிடக்கிறது.’
‘நான் முரட்டுத்தனம் ஆனவன்தான். அதை மாற்ற என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நாம் மக்களை கொல்லத்தான் செய்கிறேன். இதற்காக என்னை சிறையில் தள்ளி விடலாம் என நீங்கள் நினைக்கிறீர்களா?’ எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Post a Comment