Header Ads

test

வடமாகாணசபை போராட்டம்:மைத்திரி தீர்த்துள்ளாரென்கிறார் சுமந்திரன்!




முல்லைதீவில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக வடமாகாணசபை போராட்டமொன்றை எதிர்வரும் செவ்வாய்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்;துள்ள நிலையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணையின் முன்னதாக ஜனாதிபதியுட னான சந்திப்பில் மகாவலி திட்டத்தின் ஊடாக நடைபெறுகின்ற சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாகோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் மாவை தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சிங்கள குடியேற்றம் நிறுத்தப்படும் என அரசு பல தடவைகள் உறுதியளித்திருந்த போதிலும், தற்போது வரை மிக வேகமான முறையில் சிங்கள மயமாக்கலை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments