தெல்லிப்பழை வீமன்காமத்திலுள்ள பாவனையற்ற கிணற்றிலிருந்து பெருந்தொகை கைக்குண்டுகள் இன்று மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை கிணற்றைச் சுத்தம் செய்ய சென்ற சிலரால் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. கண்ணி வெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகளும், பொலிஸாரும் கிணற்றை சோதனையிட்ட பின்னர் 40 கைக்குண்டுககளை மீட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment