ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், இதில் சம்பந்தப்படப் போவதுமில்லையெனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து தீர்மானம் எடுக்க வேண்டிய விடயம் எனவும் இதில் வீணாக தலையைப் போட்டுக் கொள்ள வேண்டியதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
Post a Comment