Header Ads

test

இலங்கையில் பிரித்தானியப் பிரஜைகள் மீது துப்பாக்கிச் சூடு!

கொஸ்கொட பிரதேசத்தில் உந்துருளியில வந்த இரண்டு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பிரித்தானிய பிரஜை உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்த இருவரே காயமடைந்துள்ளதோடு, அவர்கள் தற்போது நாகொட வைத்தியசாலையில் சிகிச்பைப்பெற்று வருவதாக கொஸ்கொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானிய பிரஜையான மொஹமட் இஸ்மாயில் மற்றும் அதுருவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சமன் பெரேரா ஆகியோரே இந்த துப்பாக்கிச் சூட்டில் காயடைந்துள்ளனர்.

காயமடைந்த, சமன் பெரேரா பல கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குறித்த பிரித்தானிய பிரஜை இவருடன் வியாபாரத் தொடர்புகளை பேணி வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திவர்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்திவருகின்றன.

No comments