Header Ads

test

நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு


சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயல்முறைகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா திறைசேரியில் நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்த, சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கினன் மற்றும், பூகோள விவகாரங்களுக்கான கனடிய பணியகத்தின் தெற்காசிய ப் பிரிவு பணிப்பாளர் டேவிட் ஹார்ட்மன் ஆகியோர் இந்தப் பேச்சுக்களை நடத்தினர்.
டேவிட் ஹார்ட்மனுடன் கனடிய தரப்பில், அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜென் ஹார்ட், கனடா ஏற்றுமதி அபிவிருத்தி உதவித் தலைவர் வில்லியம் பிறவுண், கனடிய வணிக அமைப்பின் ஆசிய பணிப்பாளர் யொவோன் சின், கனடிய தூதரக வணிக ஆணையாளர் அவன்ரி கூன்ஞ்ஞே, ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுடன், நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தைச் சேர்ந்த மனோ தித்தவெல, நிதி அமைச்சின் செயலர் சமரதுங்க ஆகியோரும் பங்கேற்றனர். இந்தப் பேச்சுக்களில் சிறிலங்காவின் அபிவிருத்தியில் கனடிய அரசாங்கம் மற்றும் கனடிய வர்த்தகத்தின் பங்கு, முதலீடு மற்றும் நல்லிணக்க செயல்முறைகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments