Header Ads

test

சிவராம் நினைவு தினம் இம்முறையும் மட்டக்களப்பில்!


மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரத்தினம் சிவராமின் (தராகி) 13ஆவது ஞாபகார்த்த நினைவுதினம், எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு மட்டக்களப்பு மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.யாழ்.ஊடக அமையத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் நினைவேந்தலை முன்னெடுக்கவுள்ளது.
வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நினைவேந்தலை நடத்தவுள்ளனர்.இந்த நிகழ்வில் ஊடக நண்பர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவூள்ளனர்.




அன்றைய தினம் சிவராமுடன் இணைந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவரால் எழுத்தப்பட்ட நினைவு நூலும் வெளியிடப்படவுள்ளது.
சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டு புதிய நாடாளுமன்றக்; கட்டடத்துக்கு அருகில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார்.



சுpவராமின் கொலையினை இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் உத்தரவின் பிரகாரம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகமெனும் புளொட் அரங்கேற்றியிருந்தது.சிவராமை கொலை செய்ததாக சொல்லப்படும் ஆர்.ஆh எனப்படும் இராகவன் மற்றும் பீற்றர் ஆகியோர் தற்போதும் புளொட் அமைப்பில் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments