Header Ads

test

பராக்கிரம சமுத்திரத்தின் ஆறு வான் கதவுகள் திறப்பு


நிலவும் மழையுடனான காநிலையுடன் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்ததால் அதன் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நீர்தேக்கத்தின் நீர் மட்டம் நூற்றுக்கு நூறுவீதம் நிறைந்துள்ள நிலையில், மழை தொடர்ந்து பெய்யுமானால் மேலும் வான் கதவுகள் திறக்கப்படலாம் என பொலன்னறுவை வலய நீர்பாசன அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நீர்தேக்கத்தில் இருந்து மாகாவலி கங்கைக்கு நீர் வெளியேறுவதால் மகாவலி கங்கைக்கு அருகில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அந்த அலுவலகம் கோரியுள்ளது

No comments