வவுனியாவில் இராணுவத்தின் புத்தாண்டு களியாட்டம்!
வவுனியா அரசாங்க அதிபரின் வழிநடத்தலில் மாவட்ட செயலகம் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தவுள்ள புதுவருட கொண்டாட்டம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வன்னி இராணுவ கட்டளை தலைமைப்பீடம் இணைந்து வவுனியா நகரசபை மைதானத்தில் புதுவருட கொண்டாட்டத்தினை இலங்கை தொலைக்காட்சி ஒன்றின் அனுசரணையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் நகரசபை மைதானத்திற்கு அருகாமையில் காணாமல் போனோரின் உறவுகள் 408 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதுவருட கொண்டாட்டங்கள் 10 ஆம் திகதி நடத்தப்படவேண்டிய தேவையுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம் நடத்தியதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்பட்டாத நிலையில் இராணுவத்தினரை வைத்து அவர்களது போராட்ட தளத்திற்கு அருகாமையிலேயே கொண்டாட்டம் நடத்துவது அவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அமையும் என தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இந் நிகழ்வுக்கு வர்த்தகர் சங்கம் உடந்தையாக செயற்படுவது தொடர்பிலும் பெரும் அதிருப்தி கொண்டுள்ளனர்.
அண்மையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் இவ்வாறான இராணுவ அனுசரணையில் இடம்பெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் காணாமல் போனோரின் உறவுகளுடைய போராட்டத்தை மலினப்படுத்துவதாக அமையும் என தெரிவித்திருந்தார்.இந்நிலையிலும் வவுனியா அரசாங்க அதிபர் இவ்விடயம் தொடர்பாக கரிசனை கொள்ளாது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை கொண்டு இந் நிகழ்வுக்கான ஒழுங்கமைப்புகளை செய்து வருகின்றமை தொடர்பாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இராணுவ பிரனச்சம் இல்லாது சிறிய அளவில் இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கலாம் எனினும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்துகொள்ளாது அதிகாரிகள் நடந்துகொள்வதும் அதற்கு சில அதிகாரிகள் தூபமிடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் வவுனியாவை சேர்ந்த முன்னணி ஊடகவியலாளர் பதிவிட்டுள்ளார்.

Post a Comment