Header Ads

test

புதிய இந்தியத் துணைத்தூதுவருக்கு யாழில் வரவேற்பு!

 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைத்தூதுவர் வி.எஸ்.பாலச்சந்திரனுக்கு யாழ்ப்பாணம் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று வரவேற்பளிக்கப்பட்டது.

பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் மெக்ஸா முபீன் கொன்சியூலரை வரவேற்றார்.

நிகழ்வில் யாழ். மாநகர சபை உறுப்பினர்களான கே.எம்.நிலாம், எம்.எம்.நிபாஹீர், முன்னாள் மாநகர உறுப்பினரான சரபுல் அனாம் உள்ளிட்டோர் துணைத்தூதுவருக்குப் பொன்னாடை போர்த்திக் மதிப்பளித்தனர்.

No comments