Header Ads

test

வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் சிக்கி ஒருவர் பலி!

வவுனியா - பறயனாலங்குளம் பகுதியில் நேற்று  இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 7 மணியளவில் வட்டக்காடு - பறயனாலங்குளம், செட்டிகுளம் பகுதியிலுள்ள 58 வயதான பெரியசாமி முத்துலிங்கம் என்பவர் தனது வீட்டிற்கு பின்பக்கமுள்ள காட்டுப்பகுதிக்கு மின்சாரம் பெற்று அதனை பன்றிக்கு வைப்பதற்கு முயன்றபோது அதில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனிடையே உயிரிழந்த குறித்த நபரது உறவினர்கள் காவல்துறை முறைப்பாட்டில் அவர் வீட்டிற்கு மின்சாரம் பெறுவதற்கு முயன்றபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப்பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments