முன்னணிகளது மேதினம் முதலாம் திகதியே!
மே மாதம் 01ஆம் திகதியே உழைக்கும் தொழிலாளர்களது தினம்.உலகமெங்கும் அத்தினமே மேதினமாக அனுஸ்டிக்கப்படுகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பவை அறிவித்துள்ளன.
அவ்வகையில் தமது மேதின நிகழ்வுகள் முதலாம் திகதி முன்னெடுக்கப்படுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே சர்வதேச தொழிலாளர் தின விடுமுறையை இம்முறை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக, சுதந்திர வர்த்தக மையங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் ஒன்றியம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த முடிவானது, தனியார்துறை ஊழியர்களுக்கு அநீதியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அத்தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை கூட்டமைப்பின் மேதினம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகியிருக்கவில்லை.
Post a Comment