Header Ads

test

ஆல்ப்ஸ் மலையில் மலையேறுபவர்கள் நால்வர் பலி!

ஆல்ப்ஸ் மலையில் இத்தாலி, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர்கள் சிலர் பறந்து செல்லும் சாகச விளையாட்டில் ஈடுபட்டனர். மேலும் சிலர் ஒரு குழுவாக மலையேறிக் கொண்டிருந்தனர். அப்போது மோசமான வானிலையால் சூறாவளி காற்று வீசியது. இதில் மலையேற்ற வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பனியில் சிக்கிய பறக்கும் வீரர்கள் மற்றும் மலையேற்ற குழுவை சார்ந்தவர்களை மீட்டனர். இதில் 4 பேர் பலியாகினர். மேலும் 5-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலரை தேடும் பணியும் நடந்து வருகிறது.

No comments