Header Ads

test

மைத்திரி – ரணில் செவ்வாய் விசேட சந்திப்பு


புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (23) நாடு திரும்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செவ்வாய்க்கிழமை (24) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிகளை நிவர்த்திப்பதனை நோக்காகக் கொண்டு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. நல்லாட்சி அரசிலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் இதன்போது கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இராஜினாமா செய்த 16 பேர் சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்று லண்டனுக்கு அவசரமாக சென்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ள நிலையில் ஜனாதிபதி பிரதமரைச் சந்திக்கவுள்ளது. அத்துடன், மீண்டும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முக்கிய பிரேரணையொன்றை ஜே.வி.பி. கொண்டுவரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. தேசிய அரசியல் நெருக்கடிகள், கட்சி நெருக்கடிகள் தலைக்கு மேல் சென்றுள்ள நிலையில் இரு தலைவர்களினதும் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments