Header Ads

test

ஐ.தே.கட்சிக்கு நான்கு செயலாளர்கள் – மறுசீரமைப்பு குழு


ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக மேலும் மேலதிக செயலாளர்கள் மூவரை நியமிக்க கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக கட்சியின் ஊடகச் செயலாளர், பிரச்சாரச் செயலாளர், தொழிற்சங்கச் செயலாளர் போன்ற பதவிகளை உருவாக்கி அதற்கு அதிகாரிகளை நியமிக்கவும் நேற்று (11) கூடிய குழு ஆலோசித்துள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ள ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பொறுப்புக்கள் தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு குழு உடன்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர், தலைவர், பொருளாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் போன்ற பதவிகளுக்கும் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்படவுள்ளது. 19 ஆம் திகதி எடுக்கப்படும் சகல தீர்மானங்களும் எதிர்வரும் 6 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும் மே தின கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக ஐ.தே.க.யின் குருநாகல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

No comments