Header Ads

test

ஈழப் பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்கும் இங்கிலாந் வைத்தியசாலை


இங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்தியத்தில், ஈழக் குடும்பம் ஒன்று, பிரித்தானிய தேசிய வைத்தியசாலைகள் சேவைக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.
 
இதனால் அவர்களுக்கு எசெக்ஸில் உள்ள கிங்ஜோர்ஜ் வைத்தியசாலையில் பல மில்லியன் பவுண்டுகளை நட்டயீடாக வழங்க நேர்ந்துள்ளது.
 
சந்தியா என்ற இலங்கைப் பெண், 2009ம் ஆண்டு ஜுலை மாதம், நிலுஜன் ராஜதீபன் என்ற ஆண்குழந்தையை குறித்த வைத்தியசாலையில் பிரசவித்திருந்தார்.
 
பிறக்கும் போது நல்ல நிலையில் இருந்த குழந்தைக்கு, முதல் 15 நிமிடங்கள் வரையில் தாய்ப்பால் ஊட்டப்படாத நிலையில், குழந்தை இரத்த சக்கரைக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டது.
 
பின்னர் அந்த குழந்தையின் மூளையில் பாதிப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணமாக அமைந்தது.
 
சந்தியா என்ற இலங்கைப் பெண்ணுக்கு ஆங்கில மொழி தெரியாது என்பதால், அவருக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து, வைத்தியசாலை சேவைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
 
நீண்டகாலம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
 
இதன்போது ஆங்கிலம் தெரியாத சந்தியாவுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு மத்தியஸ்த்தர் ஒருவரை வைத்திசாலை அமர்த்தி இருக்க வேண்டும் என்றும், இந்த விடயத்தில் வைத்திய சேவை தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
இந்தநிலையில் சந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டி நட்டயீட்டுத் தொகை இன்னும் கணிப்பிடபடவில்லை என்றும், இந்த தொகை பல மில்லியன் பவுண்டுகளாக அமையும் என்றும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

No comments