Header Ads

test

நிலக்கண்ணி வெடிகள் தொடர்பான விழிப்புணர்வு தினம்


ஏப்ரல் 4 ஆம் திகதியான இன்று நிலக்கண்ணி வெடிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கண்ணிவெடிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவுவதற்குமான சர்வதேச தினமாகும்.
 
2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொது சபையினால் இந்த தினம் பிரகடணப்படுத்தப்பட்டது.
 
பாதுகாப்பு, அமைதி மற்றும் அபிவிருத்தியை நோக்கி முன்னகர்வு என்று தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான நிலக்கண்ணி வெடிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கண்ணிவெடிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவுவதற்குமான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
 
இலங்கையில் யுத்தகாலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் ,இடம்பெற்று வருகின்றன.
 
ஜப்பான், பிரித்தானியா போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் இடம்பெற்று வருகின்றன.
 
நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாதுள்ள இடங்களில் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments