Header Ads

test

முக்கிய சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம்


நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி வெலிக்கடை, மகசின், போகாம்பரை, நீர்கொழும்பு, அங்குனுகொலபலஸ், மாத்தறை, குருவிட்ட உள்ளிட்ட சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல சிறைச்சாலைகள் தலைமை அதிகாரிகளுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது வழமையாக இடம்பெறும் செயற்பாட்டுக்கு அமையவே அமுலாக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்

No comments