Header Ads

test

விடுவிக்கப்படுகின்ற இடங்களில் சூறையாடல்!


வலிகாமம் வடக்கில் அங்கு படையினர் நிலை கொண்டிருந்த காணிகளில் இருந்த வீடுகளை வெளியேறும் போது படையினர் சூறையாடியிருப்பதாக  இடம்பெயர்ந்த மக்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளனர்.


முன்னதாக அவை படையினர் வசமேயிருந்திருந்தது. ஆனால் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக அக்காணிகளிலிருந்த வீடுகளின் கூரைகளையும் யன்னல்களையும் படையினர் பிடுங்கிக் கொண்டு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த வீடுகளும் சேதமடைந்த நிலையிலையே காணப்படுகின்றன.


மேலும் தற்போது படையினர் அமைத்துள்ள உயர் பாதுகாப்பு வலய எல்லையிலுள்ள வீடுகள் பலவும் இருக்கின்ற போது விடுவிக்கப்பட்ட இடத்திலிருந்த வீடுகள் மட்டும் ஏன் இடித்தழிக்கப்பட்டிருக்கின்றதென்றும் அந்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

No comments