ரஷ்ய கடற்படையின் பயிற்சிக் கப்பலாக ‘Perekop’ நல்லெண்ணப் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலுக்கு கடற்படையின் மரபுகளுக்கு அமைய, சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.
இந்தக் கப்பல் ஐந்து நாட்கள் கொழும்பில் தரித்து நிற்கும், இதன்போது ரஷ்ய மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினருடன் பல்வேறு விளையாட்டு, கலாசார பயிற்சி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். 138 மீற்றர் நீளமும், 17 மீற்றர் அகலமும் கொண்ட ‘Perekop’ கப்பல், 6900 தொன் எடை கொண்டது. 399 கடற்படையினர் இதில் பணியாற்றுகின்றனர். வரும் 22ஆம் நாள் இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது
Post a Comment