Header Ads

test

யாழ் வந்த பிரபல நகைச்சுவை நடிகர்


யாழ் வந்த நகைச்சுவை நடிகர் கருணாஸ் வட மாகாண முதலமைச்சரை சந்தித்தார் (படங்கள்)

பிரபல நகைச்சுவை நடிகரும் தமிழக சட்ட சபையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் (கருணாநிதி) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள கருணாஸ் வட மாகாண முதலமைச்சரை இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சரின் இல்லத்தில் சந்தித்து உரையாற்றினார்.


இதன்போது ,தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை அழைத்து திறந்து வைக்கவுள்ளார்.

அதற்காக முதலமைச்சரை நேரில் வந்து அழைப்புவிடுக்கவே கருணாஸ் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

கருணாஸுடன் சட்டத்தரணி க.சுகாஷும் முதலமைச்சரை இன்று சந்தித்துள்ளார்.

முதலமைச்சருடான சந்திப்பு நிறைவடைந்ததும் கருணாஸ் யாழ்ப்பாண செய்தியாளர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கிளிநொச்சியில் இடம்பெறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு சென்று அவர்களையும் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது

No comments