வட தமிழீழம், கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நிலவுகின்ற வறட்சி காரணமாக கால்நடைகளுக்கான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதுடன், கால்நடைகள் நீர் தேடி அலைகின்ற நிலமை காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. குறிப்பாக, பல்வேறு பிரதேசங்களிலும் காணப்பட்ட நீர்நிலைகள் குளங்கள் என்பவற்றில் நீர் வற்றிக்காணப்படுவதனால் கால்நடைகள் மற்றும் ஏனைய விலங்குகள் குடிநீர் தேடி அலைகின்ற நிலமை காணப்படுகின்றது. தற்போது கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் ஊரியான், தட்டுவன்கொட்டி, புளியம்பொக்கணை, தருமபுரம் போன்ற பகுதிகளில் கால்நடைகளுக்கான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் கால்நடைகள் நீர்தேடி அலையும் நிலை காணப்படுகின்றது.
Post a Comment