டாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1
முற்றுமுழுதாக மக்களால் தமது உறவுகளிற்கு 9வருட இடைவெளியின் பின்னர் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் அனுஸ்டிக்கபட்டுள்ளது.
மக்களோடு மக்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள் ஈறான அரசியல் தலைவர்களென அனைவருமம் பங்கெடுக்க நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
எவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த உறவுகளிற்கு மட்டுமே முன்னுரிமை வழங்குகின்ற நினைவேந்தலாக இம்முறை முள்ளிவாய்க்கால் நடந்தேறியுள்ளது.
முன்னதாக இன அழிப்பின் பங்காளி சித்தார்த்தன்,யாழ்.மாநகரச முதல்வர் ஆனோல்ட் ,வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் போன்றவர்கள் சுடரேற்றும் மையத்தை அண்மித்து நின்றிருக்க அங்கிருந்து ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த மாணவர்களால் பொதுமக்கள் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
பிரகடன உரையை ஆற்றவந்த முதலமைச்சருடன் மாவை சேனாதிராசா,ஈ.சரவணபவன்,சி.சிறீதரன் ,வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் என பலரும் படையெடுத்து வந்தனர்.
ஆனால் அனைவரும் சுடரேற்றும் பகுதிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் பொதுமக்கள் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதலமைச்சரது மெய்ப்பாதுகாவலர்கள் கூட திருப்பிவிடப்பட்டனர்.
இதனால் சீற்றமடைந்த முன்னாள் அமைச்சர் குருகுலராஜா மற்றும் இப்போதைய அமைச்சர் அனந்தி ஆகியோர் மக்களது கொட்டகையில் தரித்துக்கொண்டனர்.
இதனிடையே கடந்த ஆண்டு பெற்றுக்கொண்ட அனுபவ அடிப்படையில் மே 18 தமிழின அழிப்பு நாளை தனது சுற்றஞ்சூழ திருமலையிலேயே இரா.சம்பந்தன் அனுஸ்டித்துக்கொண்டார்.அவரது அஞ்சலி நிகழ்வு திருகோணமலை சிவன்கோவிலடியில் நடந்தது.
இதனிடையே சுமந்திரன் எங்கும் நினைவேந்தலில் கலந்து கொண்டதாக தகவல்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment