யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்படும் குறைபாடுகளைப் போக்கும் வகையில் உடனடியாக 100 சீ. சீ. ரீ கமராக்கள் பொருத்தப்பட்டு கண்கானிக்கபடவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் .சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என வருகைதரும் நிலையில் நோயாளர்கள் பல அசௌகரியங்களையும் எதிர்கொள்வதாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய பல வழிகளிலும் நாம் முயன்று வருகின்றோம். உதாரணமாக முன்பெம் சில சமயம் இடல்பெற்றிருப்பினும் அண்மையில்கூட ஒருவர் வைத்தியசாலை பணியாளர்போன்று பாசாங்கு செய்து நோயாளரின் தங்க ஆபரணத்தை அபகரித்து சென்றுள்ளார். இதனால் நோயாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் நாம் முடிந்தவரையான பாதுகாப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. இதில் ஓர் அங்கமாக தற்போது இன்றைய தினம் 30 சீ. சீ. ரி கமராக்களைப் பொருத்தியுள்ளோம். நுழைவாயில் நடைபாதைகள் மற்றும் முகப்பு பகுதிகளை உள்ளடக்கி தற்போது இவை பொருத்தப்படுகின்றன.்இதன் மூலம் நோயாளர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கட்டுப்படுத்துவதே நோக்கமாகும் . இதேநேரம் சில தோயாளர்கள் நீண்ட நேரத் தாமதம் முறையற்ற அனுகுமுறை தொடர்பில் எதிர்காலத்தில் சுமத்தப்படும் குற்றச் செயல்களிற்கும் இந்த கமராக்கள் உண்மை பகுர்க்கும் வகையில் ஏனைய முக்கிய இடங்களிற்கும் கமராக்கள் பொருத்தப்படவுள்ளது.்இவ்வாறு பொருத்தப்படும் கமராக்களை தண்கானிக்க பகலில் இரு சுற்றாக இரு பணியாளர.களும் அதற்கென அமைக்கப்பட்ட கண்காணிப்பு பிரிவில். இயங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. என்றார்.
Post a Comment