Header Ads

test

தனியான தலைவரைத் தெரிவு செய்கிறது 16 பேர் அணி – மெல்லச் சாகும் சுதந்திரக் கட்சி


எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி, தமக்கென தலைவர், தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் போன்ற பதவிகளை விரைவில் உருவாக்கவுள்ளது. இந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ”மாத்தறையில் எமது முதலாவது கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. இரண்டாவது கூட்டம், மாத்தளையில் ஜூன் நடுப்பகுதியில் இடம்பெறும். எம்மால் வெற்றிகரமாக அரசியல் பயணத்தை தொடர முடியும். மகிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், ஏனைய பங்காளர்களுடன் இணைந்து பொதுவான அரசியல் தளம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியும். இதன் அர்த்தம், சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் நாங்கள் இணைவதோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன முன்னணி இணைவதோ அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments