இனப்படுகொலை நினைவு நாளான மே 18!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான மே 18 ஆம் திகதி, தமிழின அழிப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் அமர்வு இன்று (10) கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, வடமாகாண சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தப் பிரேரணையினை முன்மொழிந்தார்.
“கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இனஅழிப்பு முன்னெடுக்கப்பட்டது. எனவே மே 18 ஆம் திகதியை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் கோரிக்கை விடுத்ததுடன், உலக தமிழ் மக்கள் அனைவரும் இனஅழிப்பு நாளான மே 18 ஆம் திகதியை துக்கதினமாக அனுஸ்டிக்குமாறும் கோர வேண்டுமென” தெரிவித்தார்.
Post a Comment