Header Ads

test

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிரணி முடிவு

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.
ஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பாக, கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் நேற்று, மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூடி ஆராய்ந்தனர்.
இதன் போதே, இந்த அரசியலமைப்பு திருத்த பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் போது அதற்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான  ஜாதிக ஹெல உறுமயவும், 20 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments