Header Ads

test

2020 பின்னரும் மைத்திரியாம்?


"2020 ஆண்டுடன் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற போவது இல்லை" எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கான ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு, கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான, மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி - மாவடி வேம்பில் நடைபெறுகின்றது.
'தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி´ எனும் தொனிபொருளில் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய  ஜனாதிபதி "சிலர் தம்மிடம் 2020இல் ஓய்வுபெற போகிறீர்களா? எனக் கேட்பதாகவும், சில ஊடகங்களும் 2020இல் தாம் ஓய்வு பெறபோவதாக செய்திகளை வெளியிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனினும் 2020இல் தாம் ஓய்வுபெற போவது இல்லை எனவும், நாட்டுக்கு ஆற்றவேண்டிய பணிகள் இன்னமும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

No comments