Header Ads

test

சீரற்ற வானிலை-24 பேர் பலி; ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு


சீரற்ற வானிலையால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் இதுவரையில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலையால், 45,680 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 174,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட 17,976 குடும்பங்களை சேர்ந்த 70,376 பேர் 265 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 121 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 5,205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments