சிங்களக் கைக்கூலி இணையம் முடக்கம் - சட்டத்தின் துணைகொண்டு சங்கதி-24-ஈழமுரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
செருப்படி செருப்பு என்ற போலியான பெயரிலும், கொரியா மெயின் ரோட், விவேகானந்தா நகர், 12123 கே.ஆர் என்று போலியான முகவரியிலும் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த சிங்களக் கைக்கூலி இணையத்தை இயக்கும் சிங்கள அடிவருடிகளும் சங்கதி-24-ஈழமுரசு நிறுவனத் தொழில்நுட்பவியலாளர்களால் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராகவும் விரைவில் சட்ட நடவடிக்கைகளை சங்கதி-24-ஈழமுரசு நிறுவனத்தின் சட்ட நிபுணர்கள் எடுக்க இருக்கின்றனர்.
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ்த் தேசிய ஊடகங்கள் மீது இணையவெளியில் சேறுபூசல்களில் ஈடுபடும் அனைத்து சிங்களக் கைக்கூலிகளுக்கு எதிராகவும் சட்டத்தின் துணைகொண்டு இனிவரும் காலங்களில் தகுந்த நடவடிக்கைள் எடுக்கப்படும் என்று சங்கதி-24-ஈழமுரசு நிறுவனம் எச்சரிக்கின்றது.
Post a Comment