வட தமிழீழம் சரசாலை தெற்கு சாவகச்சேரியை சேர்ந்தவர் தியாகராசா கமலாவதி. இவர் 80 களின் தொடக்க காலத்தில் பரராஜசேகரம் என்பவரை திருமணம் புரிந்து திருமதி பரராஜசேகரம் கமலாவதி என்ற பெயருடன் வாழ்ந்து 1991 புரட்டாதி 19 இல் தனது நான்காவது பிரசவத்தின் போது சாவகச்சேரி வைத்தியசாலையில் காலமானார். இந் நிலையில் 03.05.2018 திகதியிடப்பட்டு தியாகாராசா கமலாவதி, மணிமங்களம் சரசாலை தெற்கு சரசாலை. என்ற திருமணமாவதற்கு முன்னுள்ள பெயரிடப்பட்டு ஒரு கடிதம் சாவகச்சேரி மக்கள் வங்கியால் அனுப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீதரன் சுமதி சோரன் பற்றுஇ பளையை சேர்ந்த நபர் 500000.00 ரூபா வங்கியிடம் கடனாகப் பெற்றதாகவும் அதற்கு குறித்த நபர் பிணையாளியாக உள்ளதாகவும்இ அவர் கடன் நிலுவையை இன்னமும் செலுத்தி முடிக்க வில்லை எனவும், இந் நிலை நீடிக்குமாயின் பிணையாளி என்ற முறையில் பொறுப்பேற்க நேரிடும் என்ற சாரப்படவும் எழுதப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த குடும்ப பெண்ணிற்கும் சோரன்பற்றை சேர்ந்த எவரிற்கும் எந்ந தொடர்பும் எப்போதும் இருக்கவில்லை என கூறும் உறவினர்கள் இக் கடிதத்தின் மர்மம் தெரியாது குழம்பியுள்ளர்.
Post a Comment