28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி!
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
இராணுவத்தின் 23,962 பேரும் கடற்படையின் 1,160 பேரும், விமானப் படையின் 443 பேரும், காவல்துறையில்; 2,568 பேரும், சிவில் பாதுகாப்புப் படையின் 456 பேரும், உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாகப் பெறப்பட்ட வெற்றியை, குறுகிய நோக்கத்துக்காகவும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவும் பயன்படுத்தக் கூடாதெனவும்;, இராணுவத் தளபதி, தனது அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment