Header Ads

test

யாழ் நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் கலந்துரையாடலும்


தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆண்டுகள் கடக்கின்றது.

 தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும்.
மேற்படி நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் கலந்துரையாடலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 01.06.2018 (வெள்ளிக்கிழமை) மாலை 5.45 மணிக்கு யாழ் பொதுநூலக முன்றலில் நடைபெறவுள்ளது.

 அனைவரையும் பங்குகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

No comments