Header Ads

test

இந்தியாவில் புழுதிப் புயல்! தாமதமானது 3 சிறீலங்கன் விமான சேவை!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று புறப்படவிருந்த 3 விமானங்கள் தாமதம் அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்தியாவின் கொச்சின் நோக்கி செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான 165 என்ற இலக்க விமானம் இன்று பிற்பகல் 12.30க்கு புறப்படவுள்ளது.

அதேபோன்று இந்தியாவில் சென்னை நோக்கி இன்று காலை 8.35 க்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 129 இலக்க விமானம் இன்று காலை 10.10க்கு புறப்படவுள்ளது.

சவுதி அரேபியாவில் ஜெத்தாவை நோக்கி இன்று பிற்பகல் 2.55 க்கு பிறப்படவுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யுஎல் 281 என்ற இலக்க விமானம் மாலை 5.05 க்கு புறப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் நேற்று ஏற்பட்ட புழுதிப் புயலாலின் தாக்கமே இந்த விமானங்களின் தாமதத்திற்கான காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments