Header Ads

test

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கான வயதெல்லையை 45ஆக உயர்த்தக் கோரிக்கை!

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கான வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்டும் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.......

கடந்த 6 வருடங்கள் அரசு எந்த தொழில் வாய்ப்பினையும் வழங்க வில்லை எனவும் இதனால் பட்டதாரிகளின் வயதெல்லை கூடியிருப்பதனையும்

சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்டும். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பட்டதாரிகள் பல போராட்டங்கள் பல அரசியல் சந்திப்புக்கள் என தங்களின் வாழ்வில்

பல துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில் தங்களை நல்லாட்சி என கூறிக்கொண்டு இருக்கும் இந்த அரசு பட்டதாரிகள் விடயத்தில் இன்னும் திருப்திகரமான எந்த ஒரு விடயத்தையும் செய்யவில்லை என்பது தான் உண்மை.

அரசாங்கம் 20000 பட்டதாரிகளை உள்வாங்குவதாய் அறிவித்த போதிலும் தற்போது சுமார் 57000 பட்டதாரிகள் உள்ளனர்.

கடந்த 6 வருடங்கள் அரசு எந்த தொழில் வாய்ப்பினை வழங்க வில்லை எனவும் இதனால் பட்டதாரிகளின் வயதெல்லை கூடியிருப்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் .எனவே வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்ம்.

கடந்த அரசாங்கங்கள் பட்டதாரிகளின் நிலை அறிந்து அனைத்து பட்டதாரிகளையும் பட்டம் செல்லுபடியாகும் திகதி அடிப்படையில் உள்ளீர்த்திருப்பது அறிந்த விடயமே.

ஆனால் இந்த நல்லாட்சி இதுவரை காலமும் பட்டதாரிகள் உள்ளீர்த்ததற்கு மாற்றமாக ஒரு

முறையை கையாண்டு (விநோதமான புள்ளித் திட்டம் )பட்டதாரிகள் வாழ்வில் விளையாடுவதனை ஏற்க முடியாது.

இந்த நல்லாட்சி எந்த வகையிலும் எமக்கு உகந்ததல்ல எனபதனை உணரமுடிகிறது .

சட்டம் மக்களுக்காகத்தான். அந்த சட்டத்தை மக்களுக்காக மாற்றுவது தவறல்ல. இதைக்கூட செய்ய வக்கத்த அரசு பட்டதாரிகளின் வயதெல்லையை

மட்டுப்படுத்தி பட்டதாரிகளை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.

35 வயதைத் தாண்டிய பட்டதாரிகளின் நிலை குறித்து எந்த உறுதியான நிலைப்பாட்டையும்

அரசு கூறவில்லை.

இதனால் இப்பட்டதாரிகள் தொடர்பில் அரசு சிறந்த முடிவை வழங்க வேண்டும். அத்துடன் நாங்கள் தலைவர்கள் என ஏற்றவர்கள் இதுவரைக்கும் பட்டதாரிகள் விடயத்தில் ஒரு ஆக்க பூர்வமான அறிக்கை கூட விட முடியாத அவல நிலைகாணப்படுகிறது .

ஒரு வருடத்திற்கு மேலாக போராடிவரும் எங்களுக்கு இதுவரைக்கும் இந்த தலைவர்கள் என்ன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளார்கள் ?

நாங்கள் பல தடவை இந்த அரசியல் தலமைகளை சந்தித்து எங்கள் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் பேசுங்கள் என பல தடவை நாங்கள் வேண்டியும்

இதுவரைக்கும் இவர்கள் எங்களை கண்டுகொள்ள இவர்களுக்கு நேரம் கிடையாது .

பட்டதாரிகள் விடயத்தில் இவர்களின் செயற்பாடு ஆரோக்கியமானதல்ல.

இந்த ஒரு வருட காலத்திற்குள் இந்த தலைமைகள் பட்டதாரிகள் விடயத்தில் என் பேசியிருக்கின்றார்கள் ? இந்த இக்கட்டான சூழ் நிலையில் பட்டதாரிகளுக்கு

கை கொடுக்க முடியாத இந்த தலைமைகள் இன்னும் நம்ப வேண்டுமா?? படித்த சமூகமே சிந்தித்து செயற்படுங்கள் !கடந்த அரசுகள் பின்வரும் அடிப்படையில்.

பட்டதாரிகளை உள்ளீர்ப்பு செய்துள்ளது இதன் அடிப்படையிலயே இந்த நல்லாட்சியும் பட்டதாரிகளை உள்ளீர்க்க வேண்டும் என எதிர்பாக்கின்றோம்

பட்டம் செல்லுபடியாகும் திகதியிலிருந்து உள்வாங்குதல் .பட்டதாரிகளின் வயதெல்லை 45 உயர்த்துதல் வேண்டும் .எச்என்டீஏ உள்ளீர்கப்படவேண்டும்.

நேர்முக தேர்வுக்கு அழைக்கப்ட்ட அனைத்துப் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்களாகும்.

No comments