Header Ads

test

மீட்டது 5 ரவைகள்: உடைந்தது வீட்டு மதில்!

ஜந்து கைத்துப்பாக்கி ரவைகளை மீட்nடுக்க வீட்டு மதிலை உடைத்து இலங்கை இராணுவம் பலத்த தேடுதல் நடத்தியுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கிளிநொச்சி, தர்மபுரத்தில் உள்ள முன்னாள் போராளி ஒருவரின் வீட்டிலேயே படையினர் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

தேடுதலிற்காக கனரக வாகனமொன்றை உள்ளே செலுத்த வீட்டின் மதிலை உடைத்து உள்நுழைந்து இத்தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, கிளிநொச்சி நீதிவான் மன்றில் அனுமதி பெற்று இந்தத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தேடுதலின் போது இரும்புப்பொருட்களை கண்டறியும் டிஜெக்ரர் மற்றும் கைத்துப்பாக்கி ரவைகள் ஜந்து மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே குறித்த வீட்டின் உரிமையாளரான முன்னாள் போராளி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரியவருகின்றது.
அண்மைக்காலமாக பல இடங்களில் இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிப் பல இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்கின்றனர். எனினும் அவ்வாறு எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.




No comments