Header Ads

test

காணாமல் போன சீனர் 9 நாட்களுக்குப் பின் குழியில் இருந்து மீட்பு!


அதிவேக நெடுஞ்சாலை பணிக்காக வந்த சீனாவை சேர்ந்த ஒருவர் கடந்த 12 ஆம் தேதி தியகொட பிரதேசத்தில் காணாமல் போயிருந்தார். 9 நாட்களுக்குப் பின் குழி ஒன்றினுள் இருந்து அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

 கடந்த 11ஆம் திகதியில் அம்பாந்தோட்டை -மாத்தறை அதிவேக வீதி வேலைக்காக சீனாவில் இருந்து தியகொட பிரதேசத்திற்கு தொழிலாளியாக வந்த ஒருவர் காணாமல் போயிருந்தார். காணாமல் போயிருந்தவர் சீனாவை சேர்ந்த 35 வயதுடைய ஜிந்தாவு என்பவராவார். இவர் இரவு 7.00 மணியளவில் தான் தங்கியிருந்த வேலைத்தளத்தில் இருந்து வெளியில் சென்று வருவதாக தன்னோடு தங்கியிருந்தவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அதன் பின்னரே இவர் காணாமல் போனதாக சந்தேகிக்கப்பட்ட தியகொட ஆரணிய ஆற்றுக்கு அருகில் வைத்து இவருடைய தொலைபேசி, பாதணி, சட்டை ஆகியவை கிடைத்தன
.

 இதனால் இவரை மாத்தறை தியகொட போலீசாரும், ராணுவத்தாரும், பொது மக்கள் பலரும் தேடும் பணியில் ஈடுப்பட்டு வந்தநிலையில் எவராலும் தேடிக்கண்டுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. 9 நாட்களுக்குபின் நேற்றுமுன்தினம் மாலை உடஹபரக்க மஹா பெவுனக அசபுவ வீதியின் பேரகுட்டிய கிராமத்தின் நிமல் என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனாந்தரம் ஒன்றில் உள்ள குழி ஒன்றினுள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

 ஹேவாதுகே சுனில் என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் மூங்கில் வெட்ட இப்பிரதேசத்திற்கு வந்தபோது சத்தம் கேட்பதை அவதானித்து இருக்கிறார். அதன் பின்னர்ஒருவர் பாலடைந்த கிணற்றில் கிடப்பதை அவதானித்த விட்டு தியகொட போலீஸ் நிலையத்திற்கு அறிவித்திருக்கின்றார்.

 அதன் பின்னர் போலீஸார் 1990 சேவைக்கு அழைத்து குறித்த நபரை கிணற்றில் இருந்து மீட்டு மாத்தரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவரை காப்பாற்றும் பணியில் மாத்தரை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பாரிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் 9 நாட்கள் இவர் எந்தவிதமான உணவும் இன்றி குழிக்குள் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

No comments