எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில், வடக்கு மாகாண சபை நடத் தும் நினைவேந்தலின் முதன்மை சுடர்களை போரில் பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்களே ஏற்றவுள்ளனர் என்று நினைவேந்தல் ஏற்பாடு தொடர்பில் ஆராயும் வடக்கு மாகாண சபை உறுப் பினர்களின் குழு முடிவெடுத்துள்ளது.
வடக்கு மாகாண சபையால் நியமிக்கப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந் தல் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு முள்ளி வாய்க்கால் மண்ணில் நேற்றுக் கூடிக் கலந்துரையாடியது. வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், பிறிமுஸ் சிராய்வா, அ.பரஞ்சோதி, எம்.கே.சிவாஜிலிங்கம் இவர்களுடன் ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வடக்கு மாகாண சபையினருக்கு மேலதிகமாக, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, கரைத்துறைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றின் உறுப்பினர்களும், முன்னாள் போராளிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். வடக்கு – கிழக்கின் எட்டு மாவட்டங்களையும், மலையகம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 9 சுடர்கள் ஏற்றப்படும். முதன்மைச் சுடர் ஏற்றப்படாது. 9 சுடர்கள் ஏற்றப்படும். அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த போரில் பாதிக்கப்பட்ட ஒருவர் அதனை ஏற்றி வைப்பார். இதற்கு மேலதிகமாக ஆயிரத்து 500 சுடர்கள் ஏற்றப்படவுள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கொள்கை அறிக்கையை நிகழ்துவார். அவரைத் தவிர வேறு யாரையும் பேச அனுமதிப்பதில்லை என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று மாலையே, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. நாளை மறுதினம் புதன் கிழமை முள்ளிவாய்க்காலில் மீண்டும் கலந்துரையாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment