காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு முல்லைத்தீவில்
காணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.
முதல் கலந்துரையாடல் மன்னாரிலும், இரண்டாவது கலந்துரையாடல் மாத்தறையிலும் இடம்பெற்றன.
மூன்றாவது கலந்துரையாடல் நாளை மறுநாள் சனிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, திருகோணமலை, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில், காணாமல் போனோல் பணியகத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.
முல்லைத்தீவில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Post a Comment