Header Ads

test

நினைவேந்தலிற்கு ஏற்பாட்டுக்குழு தேவை?



மே தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்காக முள்ளிவாய்க்கால் மண் தயாராகிக் கொண்டிருக்கின்றது.யாழ். சூபல்கலைக்கழக மாணவர்களினது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து முள்ளிவாய்க்கால் மக்களுடன் முல்லைதீவு மாவட்டத்தின் பொது அமைப்புக்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் ,கேப்பாபுலவு மக்களென பல தரப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன.


இம்முறை நினைவேந்தல் நிகழ்வினை எந்தவொரு அரசியல் சாயமுமில்லாது முள்ளிவாய்க்கால் மக்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து நடாத்துவதெனவும் நினைவேந்தல் நிகழ்வில் யாரும் கலந்து கொள்ளலாமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே வேளை முள்ளிவாய்க்கால் மண்ணின் எந்தவொரு பகுதியிலும் யாருமே பிரிந்து நின்று நிகழ்வுகளை நடாத்த அனுமதில்லையெனவும் அம்மக்கள் முடிவெடுத்துள்ளனர்.


இதனிடையே நாளை திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான கூட்டமொன்றிற்கு அழைப்புவிடுத்துள்ள முதலமைச்சர் அக்கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் அழைப்புவிடுத்துள்ளார்.


எனினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ஏற்பாட்டுக்குழுவொன்றை அனைத்து தரப்புக்களினையும் உள்ளடக்கி உருவாக்க கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.மாணவர்களது ஒட்டுமொத்த முயற்சியை தவறாக எவரேனும் திசைதிருப்பி தமது நலன்களிற்கு பயன்படுத்திவிடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

No comments