வலிகள் சுமந்த எம் தேசமும் மக்களும் நய வஞ்சகமாய் கயவர்களின் சதிவலையில் அகப்பட்டு அழிந்துபோன கொடிய நாள் இன்று வரலாற்று பதிவில் வடுவாய் பதிந்து போனது முள்ளிவாய்க்கால் படுகொலை கொத்தணி குண்டுகள் கொத்து கொத்தாய் விழுந்து பல லட்சம் உயிர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தன முள்ளிவாய்க்கால் மண்ணில் புத்தனும் காந்தியும் ஏசுவும் கைகோர்த்து நின்றனர் மௌனமாய் அன்று... இறந்து விழுந்தவருக்கு ஈமக் கடன் செய்ய அன்று இடமும் இல்லை நேரமும் இல்லை அவரவர் உயிர்காக்க பிணத்தின் மேல் ஏறிமிதித்து ஓடினர் என்றுமில்லாதவாறு எம் மக்கள் அன்று...தங்கள் உயிர் எப்போ பறிபோகும் என்ற பதைபதைப்புடன் .... இரத்த கறை படிந்து போனது-அன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிதறி கிடந்த சொத்துக்களும் சிதைந்து போன உடல்களும் -அன்றைய ஒரே நாளில் நிறைத்து போனது முள்ளிவாய்க்கால் முற்றத்தினை நந்திக்கடலும் செங்கடல் ஆகிப்போன அன்று தெய்வங்களும் வல்லரசுகளும் கண்மூடி நின்றது எம் தேசத்தில் நிகழ்ந்த கொடூர இன அழிவைப்பார்த்து வல்லரசுகள் உதவிக்கரங்ககள் நீட்ட அகங்காரத்துடன் அடியோடு அழித்தொழித்து ஏப்பம் விட்டனர் புத்தரின் வழி வந்த புலன் துலைத்தவர்கள் காந்தியம் பேசிய காந்தி தேசமும் கரம் கோர்த்து நின்றது கணமேனும் இரக்கமின்றி தமிழனை அழிப்பதில் அன்று புத்த பெருமானின் வம்சா வழியினருடன் ஆண்டு ஐந்து ஆகியும் இன்றென்ன என்றுமே மறக்க முடியா மனங்கள் நினைத்து நினைத்து வெதும்புகிறது எம் இனத்தை எண்ணி இனியும் வேண்டாம் இந்த இழப்பு விமோசனம் வேண்டும் இறைவா எம் இனத்திற்கு கண் திறந்து காத்திடு எம் தேசத்தையும் மக்களையும் வேண்டுகிறேன் கடவுளே உம்மிடத்தில் தமிழன் அழிவின் சாபத்திற்கு விமோசனம் வேண்டும் என்றே இறங்கிவாரும் இறைவா விடிவைதாரும் இறைஞ்சி நிற்கிறேன் இருளில் இருக்கும் எம் தேசத்தின் விடிவிற்காய் .....!
Post a Comment