திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் காயமுற்ற மனைவி திருகோணமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த நல்லிதன் தமயந்தி (வயது- 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவன் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கணவரான ராசய்யா ரேஹனை (வயது- 34) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment