கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க, பெண் மருந்தாளர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 24ஆம் நாள் அனுராதபுர சிறைச்சாலை, மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமித் வீரசிங்கவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, பெண் மருந்தாளர் ஒருவருக்கும், அவருக்கும் இடையில் வாய்ச்சண்டை ஏற்பட்டது. அதன்போது, அமித் வீரசிங்கவை பெண் மருந்தாளர் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக, அனுராதபுர காவல் நிலையத்தில், மருந்தாளர் முறைப்பாடு செய்துள்ளார். அதேவேளை இந்தச் சம்பவத்தை அடுத்து அமித் வீரசிங்க அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment