இஸ்ரவேலின் தலைநகரை ஜெரூசலம் என உத்தியோகபுர்வமாக ஏற்றுக் கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தலையீட்டினால் ஜெரூசலத்துக்கு மாற்றப்பட்ட அமெரிக்க தூதரகத்தின் திறப்பு நிகழ்வு இன்று (14) இடம்பெறவுள்ளதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை அறிவித்துள்ளது. இஸ்ரவேல் பிரதமர் பென்ஜமின் நதன்யாகுவின் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு, இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் என்பதாகும். இருப்பினும், டிரம்புக்குப் பதிலாக இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டிரம்பின் மகள் இவன்காவும், அவளது கணவன் ஜேராட் குஷ்னர் ஆகியோருமே இந்நிகழ்வுக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் இருவரும் டிரம்பின் ஆலோசகர்களாக செயற்படுபவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
Post a Comment