சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், படுகொலை தொடர்பான புதிய தகவல்களுடன் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கை நேற்று கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான, மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிசை காவல் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகதபால ஆகியோரை எதிர்வரும் 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment