Header Ads

test

நினைவு தூபி:மைத்திரி,ரணிலுடன் பேசும் விசயகலா!



முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவு தூபி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து  வலியுறுத்தியுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த இந்த மக்கள் நினைவுகூர முடியாத நிலைமை பல வருடங்களாக நிலவி வந்தது.  ஆனாலும்  எமது நல்லாட்சி  அரசாங்கம் பதவியேற்றதையடுத்து  2015 ஆம் ஆண்டு மே மாதம் முதல்   முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை நினைவேந்தல் செய்யக்கூடிய நிலைமை  ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக  முள்ளிவாய்க்காலில்  உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது.

இதேபோன்றே கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வுகளும்   வடக்கு, கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டது.

யுத்தத்தில் பொதுமக்களும்  கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கமே  ஏற்றுக்கொண்டிருக்கின்றது.  இந்த நிலையில்  முள்ளிவாய்க்கால்   நினைவேந்தல் நிகழ்வானது   அரசியல், சுயநல பேதங்கள் இன்றி பொதுவான எண்ணத்துடன் நடத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும்.

உயிரிழந்த உறவுகளை   நினைவுகூரும் நாளில்  அரசியல் பேதங்கள் இன்றி  சகல தரப்பினரும்  ஒன்றிணைந்து  செயற்படுதல் அவசியமானதாகும்.  உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு  முள்ளிவாய்க்காலில் நினைவுதூபி அமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை கடந்த மூன்று வருடங்களாக  வலியுறுத்தி வருகின்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த புதன்கிழமை  சந்தித்து  நினைவுதூபி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கான கடிதத்தினையும் கையளித்துள்ளேன்.

அதேபோன்றே பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவிடமும்   இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேபோன்றே நினைவு தூபி அமைக்கும் விடயத்திலும்  தொடர்ச்சியாக அக்கறை  செலுத்துவேனென அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் தூபியை அமைக்கப்போவதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments