Header Ads

test

புகைப்பிடித்தலுக்கு எதிர்ப்புத் தொிவித்து யாழில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் புகைப் பிடித்தலுக்கு எதிர்ப்புத் தொிவித்து கனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை அனைத்துலக புகை எதிர்ப்பு நாளை முன்னிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொட்டடி நமச்சியாய வித்தியாலயம், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணம் நாவாந்துறை ஆர்.சி .வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் ஒன்றினைந்து இந்த ஊர்வலத்தை நடத்தின.

''புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு நல்ல சமுதாயம் உருவாக வேண்டும்'' என்ற முழக்கத்தோடு குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

No comments