திருகோணமலை- சிறிமாபுர பிரதேசத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்த ஒருவரை, கார் ஒன்றில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். சிறிமாபுர பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஹேந்தவித்தாரன செலின் குமார எனப்படும் தெல் குமார என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment