Header Ads

test

இனஅழிப்பிற்குள்ளான மக்களிற்கு சந்திரகுமாரும் அஞ்சலி!


முள்ளிவாய்க்காலில் மக்களே கொல்லப்படவில்லையென மஹிந்த அரசிற்கு குடைபிடித்த முன்னாள் நாடாளுமன்ற சந்திரகுமார் உயிரிழந்த மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வொன்றை கிளிநொச்சியில் நடத்தியுள்ளார்.


இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.
நேற்று புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் அவ்வமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டனர்.


ஒருவொரு வருடமும் இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் பொதுச் சுடரேற்றப்பட்டு பின்னர் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்ட பின்னர் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது வழக்கமாகுமென தெரிவிக்கப்பட்டுமுள்ளது.

முன்னதாக முள்ளிவாய்க்காலில் எவரும் கொல்லப்படவில்லையென கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பேரணிகளில் முன்னின்று சந்திரகுமார் குரல் கொடுத்து வந்திருந்தார்.

ஆனால் தற்போது அவரும் நினைவேந்தல் நடத்தினால் தான் மக்கள் அங்கீகாரத்தை பெறலாமென்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

No comments